கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரிக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மேஜை பந்து போட்டி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரிக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மேஜை பந்து போட்டி.

கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரிக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மேஜை பந்து போட்டி.


அண்ணாமலை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு (கடலூர், மயிலாடுதுறை ,விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி)க்கு உட்பட்ட  கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் மேசைப் பந்து போட்டி கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. 


இதில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முதலிடம் பெற்றன .கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பெண்கள் அணியும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்கள் அணியும் இரண்டாம் இடத்தை பெற்றன. பெரியார் கலை கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு சி ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது. 


அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் திரு எம்.ராஜசேகர் முன்னிலையில் நான்கு மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் ஆண்கள் ,கடலூர் பெண்கள், விழுப்புரம் ஆண்கள் ,விழுப்புரம் பெண்கள் முறையே முனைவர் செந்தில்வேலன் அண்ணாமலை பல்கலைக்கழகம், முனைவர் புவனேஸ்வரி கடலூர் முனைவர் சிவராமன் திண்டிவனம் ஏ. கோவிந்தசாமி கல்லூரி, முனைவர் சி ஜோதிப்பிரியா விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி ஆகியோர் இணைந்து இப்போட்டியினை நடத்தினர். பெரியார் கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தி. குமணன்  இப்போட்டியினை ஒருங்கிணைத்தார்.


மேலும் இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள்  தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையான போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment