கடலூர் புனித வளவனூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குருதி கொடை முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

கடலூர் புனித வளவனூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குருதி கொடை முகாம்.

கடலூர் புனித வளவனூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குருதி கொடை முகாம்.


கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த குருதி கொடை முகாமிற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சந்தனராஜ் வரவேற்புரையாற்றினார், கல்லூரி செயலாளர் தந்தை  பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.  முதல்வர் அலெக்ஸ், கல்லூரி முதல்வர் அருமைச்செல்வம், துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த முகாமிற்கு கடலூர் குருதி மைய அலுவலர் மருத்துவர் குமார் தலைமையில் ஆய்வக மேற்பார்வையாளர் தேவநாதன் செவிலியர்கள் அன்பு லட்சுமி, ஜெயக்கொடி, ஆகியோர் பணிகளை மேற்கொண்டனர்.

ஆற்றுநர் சந்தோஷ் நன்றி கூறினார்.கல்லூரி மாணவ மாணவிகள் 50 பேர் குருதிக் கொடை வழங்கினார்கள். குருதி கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment