வடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

வடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது.

வடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


வடலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வடலூர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது வடலூர் பண்ருட்டி சாலை பால்காரன் காலனியில் வசித்து வரும் முருகையன் வயது 55 மற்றும் பால்ராஜ் வயது 51 ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் கடை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அவரது கடையில் வடலூர் ஆய்வாளர் வீரமணி தலைமை யிலான காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பண்டல் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment