விருதாசலம் முதன்மை சார்பு நீதிமன்ற திறந்தவெளி அறையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 12 November 2022

விருதாசலம் முதன்மை சார்பு நீதிமன்ற திறந்தவெளி அறையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு  மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் விருத்தாசலம் வட்ட சட்டப்பணிகள் குழு, தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க 12.11.2022அன்று காலை 10 மணி அளவில் விருதாசலம் முதன்மை சார்பு நீதிமன்ற திறந்தவெளி அறையில் தேசிய அளவிலான  (National Lok Adalat)மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

இதில் மாண்புமிகு மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு எஸ். பிரபா சந்திரன் அவர்களின் தலைமையில் மற்றும் மாண்புமிகு முதன்மை  சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் செல்வி ஆர் ஜெகதீஸ்வரி அவர்களின் முன்னிலையில் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி என். பன்னீர்செல்வம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி என். சுரேஷ் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 திருமதி ஏ. அன்னலட்சுமி ஆகியோர்கள்  இரண்டு அமர்வாக அமர்ந்து மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மற்றும் இந்து திருமண சட்டத்தின் படி சேர்ந்து வாழுதல் வழக்குகள், 

காசோலை மோசடி வழக்குகள், ஜீவனம்ச வழக்குகள், குற்றவியல் வழக்குகள் ஆக மொத்தம் 106 நிலுவை வழக்குகளுக்கு 5 கோடி 53 லட்சத்து 18, 57 ரூபாயாகவும் தீர்வு காணப்பட்டது மேலும் வங்கியில் வரா கடன் வகைகள் 49 வழக்குகளுக்கு 89 லட்சத்து 64 ஆயிரத்து 353 ரூபாயாக மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அபராத வழக்குகள் 666க்கு ரூபாய் 38 லட்சத்து 20 ஆயிரத்து 900 ரூபாயாக தீர்வு காணப்பட்டு ஆக மொத்தம் *இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 821 வழக்குகளுக்கு ஆறு கோடிய, 81 லட்சத்து, 3 ஆயிரத்து,  310 ரூபாயாக தீர்வு காணப்பட்டது*

No comments:

Post a Comment