திட்டக்குடி வட்டம் கோடங்குடியில் தெருக்களிலும் நாற்று நட்டு போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

திட்டக்குடி வட்டம் கோடங்குடியில் தெருக்களிலும் நாற்று நட்டு போராட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கோடங்குடியில் உள்ள ஆதிதிராவிடர் புதிய காலணியில் மழை காலங்களில் அனைத்து தெருக்களிலும் தேறும் சகதியுமாக உள்ளதால் ஆடு மாடுகள் கூட நடக்க முடியவில்லை பலமுறை அனைத்து கட்சிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சார்பில் அனைத்து தெருக்களிலும் நாற்று நட்டு போராட்டம் வட்ட பொருப்பாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கலையரசி,துணை செயலாளர் தெய்வமணி,கசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு ஆர். சுப்பிரமணியன்,நல்லூர் ஒன்றிய செயலாளர் வி பி முருகையன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் எம் நிதிஉலகநாதன்,ஒன்றிய துணை செயலாளர் ஆர். தேவா உட்பட மாதர் சம்மேளனத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment