விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டின ஊராட்சியில் சுடுகாடு மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டின ஊராட்சியில் சுடுகாடு மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு.

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டின ஊராட்சியில் சுடுகாடு மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு நாள் மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சியின் சார்பாக அளிக்கப்பட்டது.


இராசேந்திரப்பட்டிணம் ஆதிதிராவிட மக்களுக்கு மயாணம் வசதியில்லாமல் பிணத்தின் மீதே பிணத்தினை புதைக்கும் அவலநிலை காலம் காலமாக இருக்கின்றது. இதுசம்மந்தமாக பலமுறை மனுகொடுத்தும் எந்த பயனும் இல்லை என்பதால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை ஊராட்சி மன்ற தலைவர் சடையன் பெயரன் கொடுத்துள்ளார்.


நடவடிக்கை இல்லாமல் மேலும் இந்த அவநிலை நீடித்தால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. எத்துனை காலம்தான் தீர்மானம் போடுவது எத்துனை காலம்தான் கோரிக்கை மனு கொடுப்பது இனி மக்களுக்கான மயாணத்தை மக்களே அமைத்துக்கொள்ளும் காலம் வரத்தான் போகின்றது. எனவே அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டுமென  அவ்மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment