பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 November 2022

பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்.


சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கமும்  புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு  கல்லூரியும்  இணைந்து  அண்ணாமலை நகர், கே.ஆர்.எம். நகரில் உள்ள ஏ.ஆர்.ஜி. அகடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு  கல்லூரியின் மருத்துவர் கே.சுனில்குமார் அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.


இதில் 100 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 45 மாணவர்களுக்கு குறைகள் கண்டுபிடிக்கப் பட்டு சிகிச்சையும் பரிந்துரையும் செய்யப்பட்டது.

இந்த முகாமை ரோட்டரி மிட் டவுன் சங்க தலைவர் முனைவர் எஸ். பிரகதீஸ்வரன் வழிகாட்டுதலின் பேரில் சாசன செயலாளர் ஏ.எஸ்.கேசவன் மற்றும் இன்னர் வீல் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். 



இன்னர் வீல் சங்கத்தின் தலைவி திருமதி.செல்வி முத்துக்குமரன் தலைமை தாங்கினார். 

தாளாளர் கேப்டன்,  ப்பி.ஆடியபாதம் அவரகள் கண் சிகிச்சை முகாம் பற்றி விளக்க உரையாற்றினார்.


இந்த முகாமில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கேசவன் மற்றும் பொருளாளர் எல். சி.ஆர். கே நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கீதா கணேசன்,  இன்னர் வீல் சங்க செயலாளர் திருமதி முத்து நாச்சியம்மை சிதம்பரம், திருமதி அனிதா தீபக் குமார்,  வரலட்சுமி கேசவன், இன்னர் வீல் சங்க எடிட்டர் திருமதி ஜோதிமணி பழனி, திருமதி சம்ஷாத்பேகம் பாலாஜி, திருமதி இந்திரா சுப்பிரமணியன், திருமதி ஷீலா ராணி திருமலை மற்றும் ஏ.ஆர்.ஜி. பள்ளியின் ஆசிரியர்கள் ஊழியர்கள் உடற்பயிற்சி ஆசிரியைகள்,மாணவர்கள் பலர், கலந்து கொண்டனர். செயலாளர் முனைவர் கே. சின்னையன் மற்றும் ஏ.எஸ்.கேசவன், அவர்களும் நன்றி கூறினார்கள்.

No comments:

Post a Comment