இந்து சமய அறநிலைத்துறை மீது வீண்பழி சுமத்த வேண்டாம் தமிழக அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய போது:-

சிதம்பரம் நடராஜர் கோவிலை மன்னர்களும் நம் முன்னோர்களும் கட்டினார்கள் என்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறிய கருத்தை பொது தீட்சிதர்கள் மறுக்க முடியாது
இது ஒரு பொது கோவில்இக் கோவிலில் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தொழில் துறையில் அனுமதி பெற்று இருக்க வேண்டும் ஆனால் அனுமதி பெறாமல் பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் கட்டிடங்களை பொது தீச்சிதர்கள் தங்களது இஷ்டத்திற்கு இடித்து புதிய கட்டிடங்கள் கட்டியது தவறு யாரிடம் இருந்து அனுமதி பெற்றார்கள்.
இக் கோவில் விவகாரத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்று பொது தீட்சிதர்கள் கூறி வருவது வேடிக்கையாகும் வேதனையாகவும் உள்ளது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் மனுக்கள் சென்ற காரணத்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இது குறித்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை விசாரித்து வருகிறது இது தவறு என்றும் விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்றும் பொது தீச்சிதர்கள் கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

இந்து சமய அறநிலைத்துறைக்கு அதிகாரி முறை அதிகாரம் இல்லை என்று
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப உண்மை என்று கூறினால் பொய் உண்மையாகி விடாது. தீட்சிதர்கள் தரப்பு கூறுவது அது போன்று தான் உள்ளது.
சட்டம் என்பது அனைவருக்கும் சமம் பொது தீச்சிதர்கள் ஏதோ தில்லை நடராஜர் பெருமானுடன் தாங்கள் வந்ததாக நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர் பொது தீட்சித்தர்கள் தமிழக அரசு மீது வீண்பழி சுமத்த வேண்டாம்.
எனவே தீச்சிதர்கள் பக்தர்களோடும் தமிழக அரசோடும் இணக்கமாக இருக்க வேண்டும். என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா தெரிவித்தார்
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment