விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயற்குழு கூட்டம் . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயற்குழு கூட்டம் .

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயற்குழு கூட்டம் .


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 27ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் இலங்கையில் நடந்த போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவெழுச்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, பெரும் திரளாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொள்வது, ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் கட்டமைப்பை வலுப்படுத்தி கொடியேற்றுவது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார்,மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பாலமுருகன் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் தங்கவேல் வெங்கடாசலம் பழனிவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி அருண் நீலகண்டன் தங்கமணி ஆனந்த் பிரகாஷ் பி.ஜி. சேகர், ஆகையால் கலந்து நிகழ்ச்சியின் முடிவில் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் நன்றி உரை கூறினாார். நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment