விருத்தாசலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 4 பேர் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

விருத்தாசலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 4 பேர் கைது

விருத்தாசலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 4 பேர் கைது


விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 


இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை  அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment