பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 20 லட்சம் மதிப்புள்ள வகுப்பறை திறப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 20 லட்சம் மதிப்புள்ள வகுப்பறை திறப்பு

IMG-20221120-WA0017
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டப்பட்டன அதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரி ராம் மகேஷ் தலைமை தாங்கினார் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரசாங்கம் அவைத்தலைவர் ரங்கசாமி கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் ஆகியோர்  முன்னிலை வகித்தனர் பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

IMG-20221120-WA0016


இதில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செழியன் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எழிலரசி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர்கள் நக்கந்தங்குடி தியாகராஜன் குமாரமங்கலம் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/