கடலூரில் தொடர் கன மழை - தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

கடலூரில் தொடர் கன மழை - தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரம்


கடலூரில் கன மழை பெய்து வருகிறது  தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  அறிவுறுத்தல்படி கடலூர் மாநகரில் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரை உடனே வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரி ராஜா அவர்கள் உத்தரவு 


கடலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் கானப்பட்ட நிலையில் கன மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் கடலூர் மாநகர 10 வதுவட்டம் மற்றும் 12 வது வட்டம்  குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டு சாலைகளில் நீர் தேங்கி நிற்பதாலும் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதையறிந்து 12வது மாமன்ற உறுப்பினர் பிரசன்னா 10வது மாமன்ற உறுப்பினர் ராஜ்மோகன், ஆகியோர் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிற்கு தகவல் தெரிவித்தனர்.


உடனே  மேயர்  உத்தரவுகினங்க கடலூர் 10, 12 வார்டு நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி மாநகராட்சி சார்பில் ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.


மேலும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா  நேரில் சென்று பார்வையிட்டார் உடன் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் , மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா,நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி, மாநகராட்சி பொறியாளர் , மண்டலகுழு தலைவர் பிரசன்னா , மாமன்ற உறுப்பினர் ராஜ் மோகன் , மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment