கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடிக்கும்-எடையூருக்கும் இடையே உப்போடையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தரைப்பாலம் இருந்து வந்தது. இதில் மழைக்காலங்களில் வெள்ள நீர் வரும்போது தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி விருத்தாசலம் மற்றும் வேப்பூர் பகுதியை சென்றடைந்து வந்தனர். இந்நிலையில் நபார்டு வங்கி திட்டத்தில் ஒரு கோடியே 55 லட்சம் செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டதன் பேரில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் தணிகாசலம், தாசில்தார் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ராதிகா, தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், ஒன்றிய சேர்மன் மலர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை விஷ்ணு, வெங்கடேசன், ஐயப்பன், சுப்பிரமணியன், கார்த்திக், சேகர், விசுவநாதன், ராஜு, ஒப்பந்ததாரர் பொன்னுசாமி, கிரிதரன், காங்கிரஸ் கட்சி மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment