விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 November 2022

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில் உலக புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது. தேம்பாவணி இயற்றி தமிழ் வளர்த்த வீரமாமுனிவரின் 342வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் திருத்தல அதிபர் தேவசகாயராஜ் தலைமை தாங்கினார். விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,  கலந்து கொண்டார்.உடன்

மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, தலித் விடுதலை இயக்க கடலூர் புதுவை மறை மாநில தலைவர் ராபர்ட் பெஞ்சமின் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் வீரமாமுனிவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 


முன்னதாக கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தை சுற்றுலாத்தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் மங்கலம்பேட்டையில் இருந்து கோணங்குப்பம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதை உடனடியாக  செய்து தருகிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உறுதி கூறினார். நிகழ்ச்சியில் திருத்தல உதவி அதிபர்கள் அந்தோணி ராஜ் ,

சூசைமணி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக மாணவ மாணவிகளுக்கு போட்டிகளை வைத்து பரிசு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment