மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தியதன் விளைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், கோட்ட அளவில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலர் அந்தந்த மருத்துவமனைகளுக்கு தகவல் சொல்லியும் விருத்தாசலத்தில் மாதம் 3-வது புதன்கிழமை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டபிறகு அங்கு நடத்தாமல் மாற்று திறனாளிகளை அலைக்கழிக்கும் வகையில் நிர்வாக நலன் கருதி கம்மாபுரம்  மருத்துவமனையில் மாற்றி நடத்துவதை கண்டித்து அமைப்பின் மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார்,  மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன்,  மாவட்ட தலைவர் சின்னத்தம்பி மாற்றுத்திறனாளிகள் சாங்க மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி , வி தொ ச .வீரமணி மற்றும் கிளை செயலாளர்கள் அடைக்கலம், சாமிதுரை, சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர் போராட்டம் நடத்தியவர்களை  அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வருகின்ற டிசம்பர் மாதம் 3-வது புதன்கிழமை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்துவதாக  கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

No comments:

Post a Comment

*/