கடலூர் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து 16 பெண் பணிநீக்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

கடலூர் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து 16 பெண் பணிநீக்கம்

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று பணிநீக்கம் செய்வதாக அறிவித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பணிபுரிந்த 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் கடலூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே குமார் ஒன்றிய செயலாளர் காசிநாதன் வர்த்தகப்பிரிவு பரதன் முதுநகர் பகுதி செயலாளர் வி .கந்தன் மாநகர கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த்ராஜ், ஏ.ஜி.தர்ஷனா ,வினோத் ,பரணி முருகன் மஞ்சக்குப்பம் பகுதி செயலாளர் வெங்கட்ராமன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வம், எம் .ஜி. ராமச்சந்திரன் ,ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் அவர்களக  நேரில் சந்தித்து  பணி நீக்கம் செய்த அம்மா உணவக 16 பெண் பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர்.

மேலும்   சேவல் ஜி.ஜெ. குமார்  கூறயதாவது அரசு மருத்துவமனை வளாகம் உழவர் சந்தை அருகில் அம்மா உணவகங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் கொரோனா காலத்தில் அவர்கள் தம் உயிரை பனையும் வைத்து வேலை புரிந்து வந்தனர் இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் சிறப்பான முறையில் தரமான உணவு அருந்தி வந்தனர் தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக அம்மா உணவகத்தில் பணி புரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை எவ்வித அறிவிப்பும் இன்றி மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதை அறிந்து இன்று மாநகராட்சி ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து அம்மா உணவகத்தில் பணிபுரியும் 16 பெண்களை பணி நீக்கம் செய்துள்ளீர்கள் 

இதற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளோம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் பெண் பணியாளர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினோம் பணி நீக்கத்தால் பணிபுரியும் பெண்களின் நிலை தீக்குளிக்கும் மற்றும் பல்வேறு மனநிலைகளில் அவர்கள் பாதிப்படைந்துள்ளார்கள் என்பதையும் இதனால் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் நீங்கள் நடுநிலையாக செயல்படுங்கள் குளறுபடி செய்தால் நாங்கள் அரசியல் செய்ய நேரிடும் என்றும் கூறினார். 


அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் என்பதினால் இவர்கள் பயணிக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார் இதேநிலை நீடித்தால் மாவட்ட செயலாளரிடம் அனுமதி பெற்று மாநகராட்சி முன்பு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment

*/