கணவனை மீட்டு தரக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது ஏழு வயது மகனுடன் தாய் கண்ணீர் மள்க புகார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

கணவனை மீட்டு தரக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது ஏழு வயது மகனுடன் தாய் கண்ணீர் மள்க புகார்.

கணவனை மீட்டு தரக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது ஏழு வயது மகனுடன் தாய் கண்ணீர் மள்க புகார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த டெய்லர் மணிகண்டன் என்பவரை அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள்  என்பவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துவந்த நிலையில் இருவரும் என்னையும், என் பிள்ளைகளையும்  விட்டு சென்றதாகவும், எனது மாமியார் மற்றும் அவரது மகள் சவரியம்மாள் மற்றும் சவரியம்மாளின் கணவர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளிவிட்டதாகவும், தனது கணவரை மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்றும் நீதி கேட்டு தனது 7வயது மகனுடன் பாதிக்கப்பட்ட முனியம்மாள் தனது உறவினர்களுடன் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

No comments:

Post a Comment