விருத்தாசலம் ஆல்ஃபா ஓவியம் மற்றும் ஹிந்தி பள்ளியின் சார்பாக குழந்தைகள் தின விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 15 November 2022

விருத்தாசலம் ஆல்ஃபா ஓவியம் மற்றும் ஹிந்தி பள்ளியின் சார்பாக குழந்தைகள் தின விழா.


விருத்தாசலம் ஆல்ஃபா ஓவியம் மற்றும்  ஹிந்தி பள்ளியின் சார்பாக குழந்தைகள் தின விழா.

விருத்தாசலத்தில் ஆல்ஃபா ஓவியம் மற்றும் இந்தி பள்ளியில் சார்பில் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, ஹிந்தி பேச்சுப்போட்டி,  நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில்  சரக்கு மற்றும் சேவைவரி துறையின் விருத்தாசலம் சரகத்தின் கண்காணிப்பாளர் முருகவேல்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளும் வழங்கி விழாவை சிறப்பித்தார்.  


முன்னதாக ஓவியர் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை  ஓவியர் சுரேஷ், இருசாலக்குப்பம் குறிஞ்சிசெல்வன் ஆகியோர்  செய்தனர். இந்தி ஆசிரியை திருமதி தர்பார் ராஜலட்சுமி ரேவினி அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment