கடலூரில் சுமார் 60 டன் மதிப்புள்ள இரும்பு திருட்டு - செக்யூரிட்டிக்கு கொலை மிரட்டல். இருவர் கைது!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 November 2022

கடலூரில் சுமார் 60 டன் மதிப்புள்ள இரும்பு திருட்டு - செக்யூரிட்டிக்கு கொலை மிரட்டல். இருவர் கைது!!!

கடலூரில் சுமார் 60 டன் மதிப்புள்ள இரும்பு திருட்டு - செக்யூரிட்டிக்கு கொலை மிரட்டல். இருவர் கைது!!! 

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையம் கடந்த 22.10.2022 ஆம் தேதி புத்திரவள்ளி NOCL கம்பெனி தெற்கு பகுதியில்  சுமார் 60 டன் மதிப்பு (12 இலட்சம்) மதிப்பிலான இரும்பு பொருட்களை 3 லாரிகளில் திருடி ஏற்றிக்கொண்டு வந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தியபோது செக்யூரிட்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து இரும்பு பொருட்களை கடத்தி சென்றது சம்பந்தமாக புதுச்சத்திரம் காவல் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். 


புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி. வினதா  விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 1. பிரதீப்குமார் வயது 30, த/பெ செந்தில் முருகன், ஆண்டார் முள்ளிபள்ளம்,2. ராஜசேகரன் வயது 38 த/பெ அரசன், பூண்டியாங்குப்பம், 3. அஜித்குமார் 4 சண்முகம் 5.செந்தமிழ்முருகன் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். 


இவ்வழக்கில் சுகதேவ், மணியரசன், ரகு, ரமேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதீப்குமார், ராஜசேகர் ஆகியோர்களின் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சக்திகணேசன்  பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர்  பாலசுப்பிரமணியம்  இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் உத்தரவிட்டார்

No comments:

Post a Comment