உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சி புதுப்பாளையம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சி புதுப்பாளையம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று  கடலூர் மாநகராட்சி  புதுப்பாளையம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மேயர். சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை எடுத்துக் கூறினர்கள் அப்போது மேயர் சுந்தரி ராஜா கூறுகையில் தங்கள் பகுதி மட்டுமல்ல கடலூர் மாநகராட்சி முழுவதும் மக்களின் அனைத்து தேவைகளையும்  உடனடியாக பூர்த்தி செய்வேன் என்றும் எந்த குறையாக இருந்தாலும் தனக்கு தெரிவிக்குமாறு அல்லது அதிகாரிகளை தொடர்புக் கொண்டாலும் உடனடியாக குறைகள் சரி செய்து தரப்படும்.


மேலும் அவர் கூறுகையில் கடலூர் மாநகராட்சியில் குடி நீர் பிரச்சனைகளை தீர்க்க குடி நீர் வாகனங்கள் மூலம்  வினியோக்கப்படுகிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வு உடனடியாக மாநகராட்சி முழுவதும் மேற்க்கொள்ளப்படும் என்றும் கூறினார்.ஒரு சில பொது மக்களின் குறைகளுக்கு கூட்டத்திலியே அதிகாரிகளுக்கு குறைகளை சரி செய்ய பரிந்துரை செய்தார்.

கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் கடலூர் மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி பகுதி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், தேவன்பு, சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment