கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள்

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிர்வாக அலுவலர் ஜெயராஜ்  தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.


இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்ல இயல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். 


சர்தார் வல்லபாய் பட்டேலில் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உரிமையை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நம்புவேன்

என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி மேற்கொண்டனர். மேலும்

இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும் உறுதிமொழி

மேற்கொண்டனர். தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல்

ஆய்வாளர் திருமதி. சித்ரா, காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சிவகுமார்,

காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment