கடலூர் மாவட்டம் சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் உள்ள குலாலர் மடத்தில் தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் (மற்றும்) அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் சார்பில் முப்பெரும் விழாவின் பத்திரிக்கை படையல் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வருகின்ற ஜனவரி22. ந் தேதி சிதம்பரத்தில் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள கார்த்திகேயன் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நடத்துவது என்றும்
சிதம்பரம் குலாலர் மடத்தில் திருநீலகண்டருக்கு சிலை அமைத்து திருநீலகண்டர் குருபூஜை விழாவை தமிழக அரசு அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையும்
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தை தமிழக அரசு மீண்டும் அறிவிக்க வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் திருநீலகண்டர் தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது எனவும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொழிலாளர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அள்ளூர் ஏ.கே. ராஜா,மாநில மகளிர் அணி தலைவி புவனகிரி கே. ரேவதி, அள்ளூர் பி.மீனாம்பிகா, ரா.சசிகலா, மாவட்ட தலைவர் பு.உடையூர் வி.வடிவேல், கீழ மணக்குடி பி.மணிகண்டன், புவனகிரி சி.சத்யா, இளைஞர் அணி தலைவர் வரகூர் பேட்டை ஏ. ஹரிஹரன்,விளாகம் இராமலிங்கம், சிதம்பரம் ரா.கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment