குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு , புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வடலூர் காவல் நிலையத்திலிருந்து துவங்கி வடலூர் பேருந்து நிலையம் நான்கு வழி சாலை வரை நடத்தப்பட்டது. முதுகலை ஆசிரியர் கோவி. கிருட்டிணமூர்த்தி அவர்கள்  தலைமை தாங்கினார். 

கி. தாமோதரன் (முதுகலை ஆசிரியர்) அவர்கள் வரவேற்றார். உதவி காவல் ஆய்வாளர்  இரா. அறிவழகன் அவர்கள் முன்னிலையில், காவல் ஆய்வாளர் கே .வீரமணி அவர்கள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பொதுமக்கள், காவல் நிலைய காவல் நிலைய பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இறுதியில் சுகாதார ஆய்வாளர் கே. சுரேஷ் குமார் அவர்கள் நன்றி உரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  அரல. விஸ்வநாதன் அவர்கள் விழா ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment