விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்,கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 November 2022

விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்,கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்,கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக வேள்வி பூஜை  நடைபெற்றது. முன்னதாக,கோயில் உட்பிரகாரத்தில் 108 வலம்புரி சங்கு புனித நீருடன், நவ கலச யாக  பூஜை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. 
பிறகு மூலவருக்கு நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், பால் ,தயிர் ,இளநீர்  ,சந்தனம், பன்னீர் ,விபூதி உள்ளிட்ட அபிஷேகங்களும், கலசாபிஷேகம் செய்யப்பட்டு, அதன்பின்பு,108 சங்க அபிஷேகம் செய்யப்பட்டு,சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்...

No comments:

Post a Comment