விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் மற்றும் அம்பேத்கர் பவுண்டேஷன் தலைவர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கணேசன் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் மாவட்ட துணை தலைவர் மாவட்ட துணை செயலாளர் கண்ணன் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராமையன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அலிபாபு அம்பேத்கர் பவுண்டேஷன் செயலாளர் சுரேஷ்குமார் விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மங்கலம்பேட்டை நகர தலைவர் கதிர்காமன் மாவட்ட இளைஞரணி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன எழுச்சி உரையை  இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு .தமிழரசன் ஆற்றினார். 


விழாவில் கண்டன உரையை மாநில பொதுச் செயலாளர் பிரபு மாநில இணைப்பு பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை மாநில பொருளாளர் கௌரிசங்கர் மாநில பொறுப்பாளர் அன்பு வேந்தன் மாநில துணைத்தலைவர் ரமேஷ் குமார் முன்னாள் மாநில சிறுபான்மை உறுப்பினர் கலாமணி மாவட்ட செயலாளர் மேற்கு ராஜீவ் காந்தி பொருளாளர் அம்பேத்கர் பவுண்டேஷன் பிள்ளை நடராஜன். மற்றும் ஜெயசீலன் ஜெயபால் பீமாராவ் கலந்து கொண்டனர்.
இதில் கோரிக்கைகளான மத்திய அரசே! புது டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்


தமிழ்நாடு அரசுத்துறைகளில் SC/ST மக்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பபடாத காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கும் சாதி ஆணவப் படுகொலைகள் தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்றவேண்டும்.


பட்டியிலன மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை விரைந்து மீட்டுகொடுக்க வேண்டும்.


ஒடிசா மாநில முதல்வர் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர மாக்குவது போன்று தமிழக திராவிட மாடல் அரசும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விருத்தாசலம் பெரியார் நகர் திருமலை திருச்சானூர் மண்டபம் அமைந்துள்ள தெருவிற்கு நீண்டகாலமாக டாக்டர் அம்பேத்கர் தெரு என்கிற பெயரை ஏற்கமறுக்கும் சாதி வெறியர்கள் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி SC/ST மாணவிகளுக்கான புதிய விடுதியினை அரசு மகளிர் பள்ளி மாணவிகள் தங்கி பயிலும் விடுதியின் ஒரு பகுதியில் செயல்படுவது கல்லூரி மாணவிகளுக்கு போதிய வசதிகள் இல்லாமலும் கல்லூரிக்கு சென்று வரவும் சிரமமாக உள்ளது. எனவே புதிய விடுதி கட்டிடத்தை கல்லூரி அருகே கட்டுவதோடு அது வரையில் கல்லூரிக்கு அருகாமையில் தனியார் கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவும்


திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாசலம் ஆகிய தாலுக்காகளை உள்ளடக்கிய விருத்தாசலம் தலைமை மருத்துவமனையில் இரவு (ம) பகல் நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்கின்ற மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருத்தாசலம் நகராட்சிக்குப்பட்ட மேட்டுக்காலனிமுதல் சாத்துக்குடல் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாத அவலநிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மேற்படி சாலையை உடனடியாக செப்பினிட நடிவடிக்கை எடுக்க வேண்டும்.


விருத்தாசலம் சார் ஆட்சியர் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடற்ற ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதோடு,

ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான விருத்தாசலம் லுகாஸ் தெருவில் உள்ள

சமூதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆறுமுகம் நன்றி வரை கூறினார் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/