கடலூரில் வடகிழக்கு பருவமழையை ரோந்து காவல் வாகனங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பார்வையிட்டு ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

கடலூரில் வடகிழக்கு பருவமழையை ரோந்து காவல் வாகனங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பார்வையிட்டு ஆய்வு

கடலூர்  ஆயுதப்படை மைதானத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சக்திகணேசன்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா, மேற்படி வாகனங்களில் கூம்பு வடிவ பிரதிபலிப்பான்கள், இருளில் மிளிறும் அங்கி, டார்ச் லைட், விபத்தை தடுக்க பயன்படுத்தும் பிரதிபலிப்பான்கள் மற்றும் இதர உபகரனங்களை பார்வையிட்டும், வாகனங்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். 


இவ்ஆய்வின்போது தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வம், வாகன பிரிவு உதவி ஆய்வாளர்  ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment