வடலூர் பகுதியில் காப்பர் ஒயர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

வடலூர் பகுதியில் காப்பர் ஒயர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.

வடலூர் பகுதியில் காப்பர் ஒயர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் காப்பர் வயர் திருட்டில் ஈடுபட்ட இருவரை வடலூர் போலீசார் கைது செய்தனர். வடலூர் பார்வதிபுரம் பகுதி கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகிய இருவரும் வெள்ள தடுப்பு பணிக்க மேற்கொண்ட பொழுது வடலூர் பார்வதிபுரம் சுடுகாட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வயர்களை கொளுத்திய இளைஞர்களை கண்டதும் வடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் வடலூர் காவல்துறையினர் அங்கு சென்று இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாடார் (எ) அந்தோணி ராஜ் மற்றும் ஸ்டீபன் ராஜ் S/o அந்தோணி ராஜ் என்பதும் தெரிய வந்தது மேலும் காவல்துறையினர் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வடலூர் பகுதியில் காப்பர் ஒயர்களை திருடி அதனை கொளுத்தி காப்பர்களை எடுத்து இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்தது உறுதியானது.

மேலும் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் வடலூர் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்காக அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment