வேப்பூர் அருகே கள்ளச்சார விற்பனை செய்த இருவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

வேப்பூர் அருகே கள்ளச்சார விற்பனை செய்த இருவர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், கீழ் ஓரத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது.

அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த வேப்பூர் அடுத்துள்ள ஜ. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை த/பெ மாரிமுத்து, என்பவரையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி த/பெ கோவிந்தன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்து சிறுபாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் விற்ற இருவரிடமிருந்து‌ 200 மி.லி கொண்ட‌‌ 25 பாக்கெட் கள்ளச்சாராயம் மற்றும் பணம் 550/- இருந்தது தெரிய வந்தது.

மேலும் இது தொடர்பாக சிறுப்பாக்கம் காவல் நிலைய குற்ற எண்-184/22 u/s 4(1)(i), 4(1)(a), 4(1-A) படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது சிறுபாக்கம் உதவி ஆய்வாளர்கள், தனி பிரிவு தலைமை காவலர்கள் ரமேஷ், சதன், ராஜீவ் காந்தி, மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment