சாராய கடத்தலில் ஈடுபட்ட புதுவை மாநிலத்தை சேர்ந்வர் தடுப்பு காவலில் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

சாராய கடத்தலில் ஈடுபட்ட புதுவை மாநிலத்தை சேர்ந்வர் தடுப்பு காவலில் கைது.

சாராய கடத்தலில் ஈடுபட்ட புதுவை மாநிலத்தை சேர்ந்வர் தடுப்பு காவலில் கைது.

கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. எழிலரசி மற்றும் மதுவிலக்கு போலீசார் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கடந்த 07.09.2022 ஆம் தேதி பெரிய காரைக்காடு பிள்ளையார் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது  பொலிரோ, டாடா இண்டிகா ஆகிய இரண்டு கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள்  போலிசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். 


போலிசார் பொலிரோ வாகனத்தை சோதனை செய்து போது அதில் 210 லிட்டர் சாராயம், டாட்டா இண்டிகா காரில் 140 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர். 


பின்னர் விசாரணையில் காரில் மதுக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் 1. தினேஷ் 2. ராமமூர்த்தி 3. சூர்யா 4. மணி ஆகியோர் என தெரியவந்தது. கடந்த 25.09.2022 தேதி புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூரியா வயது 25, த/பெ முருகன்,  என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 


இவர் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவில் 3 வழக்குகளும், பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் ஒரு வழக்கும், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. 


இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. சக்திகணேசன் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் K.பாலசுப்பிரமணியம் ஓராண்டு காலம் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டதின்பேரில் சூர்யாஓராண்டு தடுப்புக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment