விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்த விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் உலகிலேயே மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை நாகரீக குறைவாக பேசுவது கண்டிக்கத்தக்கதாகவும்,  நாகரீக அரசியலை பாஜக கடைப்பிடிப்பதாகவும், இனியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அநாகரீக செயல்களில் ஈடுபட்டால் அதனை கண்டு பாரதிய ஜனதா கட்சி பொறுத்து கொண்டிருக்காது எனவும் பேசினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.மேலும் விருதாச்சலம் நகர தலைவர் மணியழகன், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாநில பிரச்சார பிரிவு ராஜேந்திரன், வேட்டக்குடி எழிலரசன், ரமேஷ், டாக்டர் ராஜ்குமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி,பாஜக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தலைவர்கள் வெங்கடேசன் பரமசிவம் நகர பொது செயலாளர் மணிகண்டன், நகர துணை தலைவர்கள் பூவராகம சக்தி, பிரேம் குமார்,சபா, முகிலன், சீனு, திலீப், ராஜ்குமார், தர்மா, வேட்டைக்குடி எழிலரசன், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment