விருத்தாசலத்தில் கதிர்வீச்சு தரக்கூடிய தொலைபேசி கோபுரங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 31 October 2022

விருத்தாசலத்தில் கதிர்வீச்சு தரக்கூடிய தொலைபேசி கோபுரங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில மனு.

விருத்தாசலத்தில் கதிர்வீச்சு தரக்கூடிய தொலைபேசி கோபுரங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில மனு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்கொல்லை ஊராட்சிகளில் சுமார் 800 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகம் கதிர்வீச்சு தரக்கூடிய தொலைபேசி கோபுரங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணி தொடங்கி உள்ளதால் ஊராட்சியில் வாழும் பொது மக்களுக்கு தொலைபேசி கோபுரத்தால் உருவாகும் கதிர் வீச்சுகளால் பாதிப்பு மற்றும் தோல் நோய்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாவட்டத் தலைவர் அய்யாசாமி சார்பாக சுமார் 50 நபர்கள் விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 


உடன் மாவட்ட பொதுச் செயலாளர் பாக்யராஜ் மாவட்ட துணைத் தலைவர் சிவபிரகாசம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில் முருகன் அருட்ச்செல்வன்.

No comments:

Post a Comment