விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 October 2022

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம். 

மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அக்டோபர் 2022 ஆம் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28.10.2022 வெள்ளிக் கிழமையன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கம் எண்.115-ல் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.


கடலுார் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும்விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல்/ கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் மாவட்டஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாய்ப்பினை கடலுார் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளமாவட்டஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment