கடலூர் மாவட்டத்தில் 26 ஏரிகளில் மீன் வளர்த்திட வரும் 09 11.2022 மற்றும் 10.11.2022 ஆகிய நாட்களில் பொது ஏலம் நடைபெறுகிறது. . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 October 2022

கடலூர் மாவட்டத்தில் 26 ஏரிகளில் மீன் வளர்த்திட வரும் 09 11.2022 மற்றும் 10.11.2022 ஆகிய நாட்களில் பொது ஏலம் நடைபெறுகிறது. .

கடலூர் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 ஏரிகளில் மீன் வளர்த்திட வரும் 09 11.2022 மற்றும் 10.11.2022 ஆகிய நாட்களில் பொது ஏலம் நடைபெறுகிறது. 

கடலூர் மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 26 ஏரிகள் மூன்றாண்டுகளுக்கு ஏலம் விடப்படுகிறது. 


ஒப்பந்தப்புள்ளிகள் 08.11.2022 அன்று மதியம் 12.00 மணி வரை மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ரேவு மெயின்ரோடு. கடல் உயிரியியல் அண்ணாமலை பல்கலைகழகம் எதிரில் பரங்கிப்பேட்டை -608 502. அலுவலக தொலைபேசி எண்: 04144-243033 முகவரியில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment