ஹலோ சீனியர் புதிய காவல் உதவி என் மூலம் வரும் புகார்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி தீர்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

ஹலோ சீனியர் புதிய காவல் உதவி என் மூலம் வரும் புகார்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி தீர்வு.


ஹலோ சீனியர் புதிய காவல் உதவி என் மூலம் வரும் புகார்களுக்கு  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி தீர்வு. 

முதியோர்களின் நலன் காக்க கடலூர் மாவட்டத்தில் ஹலோ சீனியர் *8220009557*என்ற புதிய காவல் உதவி எண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு வருகிறார். 


அதன் அடிப்படையில் ஊமங்கலம் அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த தனபால் வயது 60 என்பவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது வீட்டில் இருந்து தண்ணீர் பக்கத்து வீட்டிற்கு சென்றதால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஜெயசித்ரா செல்வராசு ஆகிய மூவரும் சேர்ந்து தனது மகன் மணிகண்டனை அடித்து விட்டதாக புகார் தெரிவித்ததன் பேரில் ஊமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் விசாரணை மேற்கொண்டு எதிரிகளான மேற்கண்ட மூவரையும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதுபோல் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஹலோ சீனியர் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் உடனடியாக தீர்வு காண அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு செயல்பட காரணமாக இருப்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1No comments:

Post a Comment