அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு: திமுகவினரை கைது செய்ய கோரி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு: திமுகவினரை கைது செய்ய கோரி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் மனு.

கடலூரில் திமுகவினர் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களின் உருவ பொம்மையை எரித்தது கண்டித்தும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோயிலானூர் மணிகண்டன் மற்றும் கடலூர் மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் சக்திவேல்   நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

அம்மனு கூறி இருப்பதாவது  கடலூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை படத்தை கொடும்பாவியாக சித்தரித்து கடலூர் மாநகர திமுக கழக செயலாளர் கே எஸ் ராஜா தலைமையில் மற்றும் முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி அவர்களுடன் சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 20க்கும் மேற்பட்ட திமுகவின் கை பாவைகள் பல நபர்கள்  மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஹோட்டல் உட்லண்ட்ஸ் நான்கு முனை சாலையில்  அண்ணாமலை   உருவ பொம்மையை தகாத வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி கடலூரில் உன்னால் கால் எடுத்து வைக்க முடியுமா என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசி பொது பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வன்முறையை கையாண்டு  அண்ணாமலை  உருவ பொம்மை எரித்தனர்.

பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையிலும் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் நடந்து கொண்டார்கள் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அம்மனுவில் கூறப்பட்டிருந்ததுபொதுச் செயலாளர் வினோத், அக்னி கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் பொருளாளர் ஜெனித் மேகநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் அரசு ரங்கேஷ் மாநில பொறுப்பாளர் முரளி ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், நகர பொதுச்செயலாளர் மணி இந்திரஜித், மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயா உள்ளிட்ட  நகர பொறுப்பாளர்களும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment