திட்டக்குடியில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி-பெண் உள்பட 2 சிறுவர்கள் படுகாயம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

திட்டக்குடியில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி-பெண் உள்பட 2 சிறுவர்கள் படுகாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியலூர் மாவட்டம் இருங்காலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். 


பின்னர்அவர்கள் நெய் வாசலில் இருந்து கடலூர் செல்லும் சாலையில், திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த மற்றொரு பெண் உட்பட 2 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து  இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment