சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின ஓட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின ஓட்டம்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின ஓட்டம்.

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினத்திற்கான ஓட்டம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


விழாவிற்கு கடலூர் மாநகராட்சியின் மேயர் சுந்தரி ராஜா  ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா , புனித வளனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சந்தான ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.புனித வளனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் ஒற்றுமை தினத்தை வலியுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் ஒற்றுமை தின ஓட்டத்தில் பங்கேற்றனர்.மாவட்ட இளைஞர் அலுவலர்  ரிஜேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

No comments:

Post a Comment