பி வெல் தனியார் மருத்துவ குழுமத்தின் 11 வது ஆண்டின் துவக்கத்தில் 11வது மருத்துவமனையை கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 31 October 2022

பி வெல் தனியார் மருத்துவ குழுமத்தின் 11 வது ஆண்டின் துவக்கத்தில் 11வது மருத்துவமனையை கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பி வெல் தனியார் மருத்துவ குழுமத்தின் 11 வது ஆண்டின் துவக்கத்தில் 11வது மருத்துவமனையை கடலூரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா கடலூர் மாநகராட்சி துணை மேயர் .பா. தாமரைச்செல்வன் மருத்துவர் ஜெயலால் மருத்துவர் சபரீசன் மருத்துவர் பிரவீன் ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மருத்துவமனை நிறுவனத் தலைவர் மருத்துவர் சி ஜே வெற்றிவேல் கூறுகையில்  60 சதவீதத்திற்கு மேலான நோய்கள் இரண்டாம் நிலை மருத்துவமனைகளை சார்ந்தே உள்ளது ஆனால் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் போதுமான முறைப்படுத்தல் இல்லாமல் இருப்பதால் மக்கள் பல்நோக்கு மருத்துவமனையை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் உயர்நிலை மருத்துவமனைகள் புறநகர் பகுதியில் இல்லாத காரணத்தினால் மக்கள் சிகிச்சைக்காக பெரு நகரங்பள நாடும் போது செலவும் நேரமும் அதிக அளவில் வீணாவுது தொடர் பராமரிப்பு மற்றும் தொடர் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியாமல் போகிறது என்றும் கூறினார்  மருத்துவமனையில் 50 முதல் 75 படுக்கை வசதிகள் கொண்ட 11 மருத்துவமனைகளை நிறுவி உள்ளது கடந்த 11 ஆண்டுகளாக பி வெல் மருத்துவமனை 5 லட்சம் புற நோயாளிகளுக்கும் 30 ஆயிரம் அறுவை சிகிச்சைகளையும் 10,000-க்கு மேலான வருமுன் காக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி தனது சேவை நடத்திக் கொண்டிருக்கிறது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார் மேலும் அவர் கூறுகையில் குறைந்த முதலீட்டில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்க முடியும் என்றும் நிரூபித்துக் காட்டிய பிவெல் மருத்துவமனை விரைவில் 50 மருத்துவமனைகளை தமிழகத்திலும் 500 மருத்துவமனைகள் இந்திய அளவிலும் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார் 46 சதவீத மக்கள் மருத்துவ தேவைக்காக 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்கிறார்கள் ஏனென்றால் மருத்துவமனைகளும் பெருநகரங்களில் மட்டுமே உள்ளது தனியார் மருத்துவமனைகள்  தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டிருந்தாலும் பெரும்பான்மையான மருத்துவமனைகள் பெருநகரங்களில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கபி வெல் மருத்துவ குழுமம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயாளிகள் பராமரிப்பு மையம் படுத்தப்பட்ட நிர்வாகம் நோய் மேலாண்மை மற்றும் என்ஏபிஎச் அங்கீகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை இலக்காக கொண்டுள்ளது மருத்துவ குழுமத்தின் குறிக்கோள் அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து பரப்புவது பி வெல் மருத்துவமனையில் குறிக்கோளாகும் என்றும் கூறினார் அப்போது மருத்துவர் ஜெயல மருத்துவர் பிரவீன் ஐயப்பன் மருத்துவர் சபரீசன் ஐ எம் ஏ கடலூர் கிளை தலைவர் மருத்துவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment