திடீர் தீ விபத்தினால் முற்றிலும் சேதமடைந்த குடிசை வீட்டை புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

திடீர் தீ விபத்தினால் முற்றிலும் சேதமடைந்த குடிசை வீட்டை புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்!!!

திடீர் தீ விபத்தினால் முற்றிலும் சேதமடைந்த குடிசை வீட்டை புவனகிரி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்!!!கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் ராஜகுமாரி கணவர் பெயர் ,சேதுபதி என்பவரது குடிசை வீடு  தீபாவளி அன்று திடீர் தீ விபத்தினால் குடிசை வீடு முற்றிலும் சேதம் அடைந்தநிலையில் தகவல் அறிந்து வந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆ.அருண்மொழி தேவன்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.


மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் பெற்று தருவேன் என்று உறுதியளித்து ஆறுதல் கூறினார்.


உடன்,புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான சி. என். சிவப்பிரகாசம் ஒன்றிய துணைச் செயலாளர் E.G.பிரித்திவி. மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் உமா மகேஸ்வரன், எல்லக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன், ஊராட்சிக் கழக செயலாளர் ஜெயசீலன்  மற்றும் அனைத்து நிலை கழக நிர்வாகிகள்  பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment