விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணா.

விருத்தாசலம்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில்  இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணா.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆலிச்சிகுடி கிராமத்தில் வாழும் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் தனிநபர் ஆக்கிரமிப்பதை கண்டித்தும் பத்திற்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் கார் முன்பு அமர்ந்து மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல செயலாளர் முருகானந்தம் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


போராட்டம் நடத்தியவர்களிடம் துணை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன்  கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment