கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரிராஜா தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரிராஜா தலைமையில் நடைபெற்றது.

கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரிராஜா தலைமையில் நடைபெற்றது.  

துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்  கிராமசபை கூட்டத்தைப் போன்று மாநகர சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் அறிவித்தார்.இதன்படி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.இந்நிலையில் அமைக்கப்படும் குழு கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நியமிக்கப்படுவதாக கூறி கடந்த கூட்டத்தில் விசிக,பாமக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,இன்று கூட்டம் தொடங்கிய உடனேயே மீண்டும் பாஜக கவுன்சிலர் சக்திவேல் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நடராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.அப்பொழுது குறிக்கிட்டு பேசிய மேயர் சுந்தரி ராஜா,மாமன்ற கூட்டத்தில் மேயருக்கும்,மேயர் பேச்சுக்கும் மரியாதை இல்லை என வேதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment