சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி 38-வது நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி 38-வது நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி 38-வது  நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின்  38-வதுநினைவு தினத்தை யொட்டி சிதம்பரத்தில்  நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


 சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. பி.  கலியபெருமாள் அவர்கள் இல்லத்தின் முன்பாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படம் மலர் மலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.


இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் நகர செயல் தலைவர் தில்லை கோ குமார் மாவட்ட செயலாளர்கள் நெல்சன் ஆர்.வி சின்ராஜ் மகளிர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் மஞ்சுளாதில்லை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில ஊடகப் பிரிவு பொது செயலாளர் சிவசக்தி ராஜா வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு ரோஜாப் பூ மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாநில செயலாளர் ஜெயச்சந்திரன்  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெமினி.எம்.என்.ராதா  பி. வெங்கடேசன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


இந்நிகழ்ச்சியில் குமராட்சி முன்னாள் வட்டார தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ரங்கநாதன் வட்டார தலைவர் பகவத்சிங் மாவட்ட  செயலாளர்கள் இளங்கோவன் ஆட்டோ டி குமார் முன்னாள் நகர தலைவர் சி.பி.ரத்தினம் சசிகுமார் கலை பிரிவு தலைவர்கள் பொன். மாதவ ஷர்மா நாராயணசாமி ஆர். ராஜ்குமார் ஆர்.டி.ஐ. துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி ஜெயச்சந்திரன் ரஞ்சித் மீது குடி சிவா கீழ மூங்கிலடி ஹரிபாஸ்கர் சுந்தரமூர்த்தி மகளிர் அணி மாவட்ட செயலாளர் இந்திரா  ஜனகம்   ராதா அழகர் மாலா உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இன் நிகழ்ச்சியின் முடிவில்  ஆர்.டி.ஐ. துறை மாநில பொது செயலாளர் மாவட்ட தலைவர் மனு பி ஸ்டீபன் முத்துப்பாண்டிநன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment