புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக தடைய அறிவியல் தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 October 2022

புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக தடைய அறிவியல் தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக தடைய அறிவியல் தேசிய இனைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.



சேலம் விநாயக மிஷன் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தடய‌ அறிவியல்,தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்தியது.


இந்த நிகழ்ச்சிக்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர். செந்தில் குமார் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி வட்டாரத்தில் சேர்ந்த சைபர் கிரைம் செல்லின் துணை ஆய்வாளர் என்.சந்தோஷ் கலந்து கொண்டு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு அளித்தார். மேலும் இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி உரையாடினார்கள்.


இதில் துறையை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி  பல்வேறு துறைகளை‌ சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் தடய அறிவியல் பிரிவின் உதவி பேராசிரியர்கள் அனுதேவி, கோமதி ஆகியோர் நடத்தினர்

நிகழ்ச்சியின் முடிவில் ‌துறையின் உதவி ‌பேராசிரியை அனுதேவி நன்றி உரை வழங்கினார்.

No comments:

Post a Comment