விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை உருவாக்கம், மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று விழா.!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை உருவாக்கம், மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று விழா.!!!

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை உருவாக்கம், மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று விழாவும் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை உருவாக்கம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு முதனை பொறுப்பாளர் முருகையன் தலைமை தாங்கினார்,முதனை பொறுப்பாளர் சிவகுருநாதன் விஜயமூர்த்தி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்,மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, நெய்வேலி சிவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு கடலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ்,ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுற்றுச்சூழல் பாசறை கதிர்காமன்,கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சிந்தனை,அசோக்,இளைஞர் பாசறை செயலாளர் பண்டுரங்கன் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி துணைச்செயலாளர் பெரியார் பேரன், வடலூர் தொகுதி பொறுப்பாளர் மரிய ஜோசப் மற்றும் விருத்தாசலம் தொகுதி துணைச்செயலாளர் பீட்டர் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment