கடலூர் மஞ்சக்குப்பம் வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமை மீறல் குறித்து மாபெரும் தேசிய கருத்தரங்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 October 2022

கடலூர் மஞ்சக்குப்பம் வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமை மீறல் குறித்து மாபெரும் தேசிய கருத்தரங்கம்.


கடலூர் மஞ்சக்குப்பம் வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமை மீறல் குறித்து மாபெரும் தேசிய கருத்தரங்கம். 


கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்று துறையின் 2022 ஆம் ஆண்டிற்கான சமகாலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து மாபெரும் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரியின் செயலர் தந்தை அருள் ஜி .பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கினார். 

கல்லூரியின் முதல்வர் எம் .அருமை செல்வம் ,துணை முதல்வர் ஜெ. ஜோன் ஆரோக்கியராஜ், அருள் திரு முனைவர் எம்.எஸ். சேவியர் ,அருள்திரு முனைவர் ஏ. அலெக்ஸ் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் பி .ராமர், இணை பேராசிரியர் ஞாணாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி மனித உரிமைகளின் அடிப்படை பிரகடனம் பற்றி மாணவர் மத்தியில் சிறப்பான உரையாற்றினார். ஜோசப் விக்டர் ராஜ் குழந்தைகள் உரிமையும் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். வழக்கறிஞர் செல்ல பிரியா பெண்கள் உரிமையும் பெண்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கை பற்றி கருத்துகளை தெரிவித்தார். 


இறுதியாக எஸ். பரணி மனித உரிமை மற்றும் கல்வி சார்ந்த உரிமைகள் பற்றி தனது விரிவான சொற்பொழிவு ஆற்றினார் .இந்த நிகழ்ச்சியினை வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் எல் .சந்தானராஜ், பேராசிரியர்கள் எம். ஜெயராஜ் ,முனைவர் ஆர் .சுடர் ஒளி மற்றும் பி.. பாலச்சந்தர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment