விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 October 2022

விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

விருத்தாசலம் அடுத்த இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


தனலெட்சுமி சீனிவாசா மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த இந்த மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு மருத்துவ உதவியினை பெற்றார்கள்.


மருத்துவ துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்தார்கள். இந்த முகாமில் இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். முகாமில் பங்கேற்று நோய் உறுதிசெய்யபட்ட நபர்களை இன்று 29-10-2022 மருத்துவமனையின் ஏற்பாட்டில் இலவசமாக தனி பேருந்தில் அழைத்துசென்று மருத்துவமனையில் சிகிச்சை வழங்க உள்ளார்கள்.


இந்த முகாமினை ஏற்பாடு செய்துகொடுத்த தனலெட்சுமி சீனிவாசா மருத்துவமனைக்கு இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியின் தலைவர் சடையன் பெயரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment