சிதம்பரம் நடராஜர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் வழிபட சென்ற வாசலை திறக்க வேண்டும்! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 October 2022

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் வழிபட சென்ற வாசலை திறக்க வேண்டும்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் வழிபட சென்ற வாசலை திறக்க வேண்டும்!

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு காங்கிரஸ் கோரிக்கை நந்தனார் வழிபடச் சென்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க ஆய்வு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு  கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.


மனுவின் நகலை கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.ஜோதியை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி  மனு அளித்தார், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தெற்கு கோபுரம் வாசல் நந்தி அருகே உள்ள வழியாக திருநாளை போவார் நாயனார் என அழைக்கப்படும் நந்தனார் சென்று வழிபட்ட வழி நீண்ட காலமாக நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த வழியை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் பொது அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன ஆனால் எந்த பலனும் இல்லை.


பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்களின் தீர்ப்பினை யொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீதேறி நடராஜரை வழிபட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சிற்றம்பலம் மேடை (கனகசபை) ஏறி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர் இதற்கு தீட்சிதர்கள் தடை விதி க்கிறார்களா என்று கண்காணிக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குழு அமைத்து கண்காணிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.


இதுபோல் நந்தனார் சென்று வழிபட்டதாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயில் வழியை உடனடியாக திறக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு குழு அமைத்து மேற்கண்ட வழியை திறக்க வேண்டும்.ஜாதி மதம் இனம் மொழி பாராமல் மக்கள் பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர் பாபு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஒப்புதலுடன் பக்தர்களையும் பொது மக்களையும் ஒன்று திரட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment