ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு அடிப்படை தொகுப்பு வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 October 2022

ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு அடிப்படை தொகுப்பு வழங்கப்பட்டது.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம்,பழநி பாபு அணி வணிகம் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவிகளுக்கு அடிப்படை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகுரு வரவேற்புரை நல்கினார். பள்ளியின் தாளாளர் ராமநாதன், இன்னர் வீதி சங்க தலைவி செல்வி முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ப. ராஜசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பழநி பாபு அணி வணிகத்தின் உரிமையாளர் பா.பழநி மற்றும் இன்னர் வீல் எடிட்டர் ஜோதிமணி பழநி கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு 10 பேருக்கும், மாணவர்களுக்கு 20 பேருக்கும்,  அடிப்படை பொருள் அடங்கிய தொகுப்பும், ஊக்கத்தொகை தலா ரூபாய் 500 வழங்கப்பட்டது. 


மண்டல துணை ஆளுநர் எம். தீபக்குமார், மண்டலம் 28 -ன் உதவி ஆளுநர் ரவி வாழ்த்துரை  வழங்கினார்கள். இந்த நிகழ்வில் வரலட்சுமி கேசவன், முத்து நாச்சியம்மை சிதம்பரம், அனிதா தீபக்குமார், சாம்சாட் பேகம், இந்திரா சுப்ரமணியம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர்களான வருங்கால தலைவர் நடன சபாபதி, பொருளாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் முத்துக்குமரன் செய்தார். நன்றியுரை சங்கத்தின் செயலாளர் வெ.ரவிச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment