கடலூர் ஜோஸ் ஆலுக்காஸில் 58 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

கடலூர் ஜோஸ் ஆலுக்காஸில் 58 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கும் விழா.

கடலூர் ஜோஸ் ஆலுக்காஸில் 58 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கும் விழா.


கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் 58 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 


இந்த நிகழ்ச்சியில் கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி ஆறுமுகம்,ஏ.ஜி.ஆர்.சுந்தர் மாமன்ற உறுப்பினர்கள் என்.தமிழரசன்,கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்,ஃபாரூக்அலி மகேஸ்வரி விஜயகுமார்,கர்ணன், ரங்கநாதன் திருப்பாதிரிப்புலியூர் கிளை உதவியாளர் கணபதி மற்றும் கலந்து கொண்டனர். 


இவ்விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களை கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் மேலாளர் அனூப், கணக்கு மேலாளர் சுதீஷ் மக்கள் தொடர்பு அலுவலர் அந்தோணி ராஜ் புதுப்பாளையம் ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளி முதல்வர் எப்சிபா தவராஜ் ,மற்றும் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

நலத்திட்ட உதவிகளை புதுப்பாளையம் ஒயாசிஸ் டிரஸ்ட் மாற்றுத்திறனாளிகள் பள்ளி பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , கடலூர் ட்ரீ ஹோம்ஸ் ஆர்கனைசேஷன், கே என் பேட்டை சக்தி மனநலம் பாதித்த குழந்தைகள் பள்ளி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் மூன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment