அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 October 2022

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், ஆய்வு


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியாக்குறிச்சி மற்றும் வடக்குவெள்ளுர் துணை சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இவ்வாய்வின் போது கர்ப்பிணி பெண்களுக்காக பராமரிக்கப்படும் எதிர்பார்க்கப்படும் பிரசவதேதி, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள். மேலும் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பான பதிவேடுகள் என ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார், 


மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகள் மேற்கொண்டு, பதிவேடுகள் பராமரிக்கப்படுவதையும் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் சரிவர சென்றடைவதையும் உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தினார்.


அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்புஉள்ளனவா என்பதனை ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

மருத்துவமனை மற்றும் வளாகங்களில் நோய் பரவா வண்ணம் கிருமி நாசினிக்கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன்இருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "தமிழக குரல்https://cuddalore.tamilagakural.com/?m=1

No comments:

Post a Comment